கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி: மாணவரை கைது செய்ய முற்பட்ட போது பதற்றம்

கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி: மாணவரை கைது செய்ய முற்பட்ட போது பதற்றம்

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அதை தடுக்க முற்பட்ட சிறீதரன் எம்பிக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை உருவாகியது.

இதன் போது பொலிஸாரின் பிடியில் இருந்த இளைஞரை மீட்க முற்பட்ட போது சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )