சுகாதாரத் துறைக்கு ”கடவுளே துணை”

சுகாதாரத் துறைக்கு ”கடவுளே துணை”

மருந்துப்பொருள் மோசடிக்காரர்கள் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாட்டில் சுகாதாரத்துறைக்கு கடவுளே துணை புரிய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வங்குரோத்தான நாட்டில்,தற்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர்,மனித இம்யூனோகுளோபின் என்ற அத்தியாவசிய மருந்தில் பல்வேறு கலவைகளை கலந்து தரம் குறைந்த,தரமற்ற மருந்துகளை மக்களுக்கு வழங்கியுள்ளார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 79 ஆவது கட்டமாக,அம்பலாங்கொடை,படபொல ஸ்ரீ கல்யாணதிஸ்ஸ கல்லூரி 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே வ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வேறு பல மருந்துப் பாவனைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் தரக்குறைவான மருந்தினால் கண்பார்வை இழந்தவர்கள் அதிகளவானோர் உள்ளனர்.வங்குரோத்தால் கடனை செலுத்த முடியாமல், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மூழ்கியுள்ள நாட்டில் கூட மருந்துப் பொருட்களைத் திருடுவது பெரும் குற்றச் செயல் .

மருந்துப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு கூறப்படும் போது,ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்புக்கள் இருந்ததால் சமூகமளிக்க முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தும்,
அந்நபர் அது போன்ற கூட்டங்களில் கூட கலந்து கொள்ளவில்லை. இந்நபர்கள் நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளனர் .

இவ்வாறு பல தவறுகளை செய்தவர்கள் இன்றும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.இந்த தரக்குறைவான மருந்து மோசடிக்கு சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மட்டுமன்றி சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் சார்பாக கைகளை உயர்த்திய 113 பேரும் பொறுப்புக் கூற வேண்டும்.இத்தைய நபர்கள் அமைச்சரவையில் இருக்கும் போது சுகாதாரத்துறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது .
புதிய சுகாதார அமைச்சரினால் கூட இந்தப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க முடியாதுபோயுள்ளது.ஒருபுறம் போலி மருந்து கடத்தல்களால் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த அமைச்சர், வேறு ஒரு அமைச்சுப் பதவியில் இருந்து சலுகைகளை பெற்று வரப்பிரசாதங்களை பெற்று பொழுதை கழித்து வருகிறார்.இதன் காரணமாக தற்போதைய ஆட்சியாளர்களால் உகந்த பயனளிக்கும் சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்கத் தவறியுள்ளனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )