
வரி’ சுமக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்; திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.தெரிவிப்பு
வற் வரி, எரிபொருள் விலைகளை அதிகரித்து அரசாங்கம் தம் மீது சுமத்தும் சுமைகளுக்கு மக்கள் விரைவில் தகுந்த பதிலை வழங்குவர் என்று ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் மக்களுக்கு எந்த கொடுப்பதாக தெரியவில்லை. இந்த வருடத்தை வற் வரியை அதிகரித்து மக்களின் உணவுகளுக்கும் வரியை அறவிடுகின்றது. இப்போது எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் சுமைகள் மக்கள் மீதே சுமத்தப்படும். இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் நிவாரணம் வழங்குவதை விடுத்து மக்கள் மீது அடக்குமுறைகளையே முன்னெடுக்கின்றது.
எவ்வாறாயினும் இன்னும் சில மாதங்களுக்கு அரசாங்கம் இப்படி அடக்குமுறைகள், சட்டங்களை போடலாம். ஆனால் மக்கள் சிறந்த பதிலை வழங்குவர். நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்று மக்களையும் துன்பத்திற்குள் இந்த அரசாங்கம் தள்ளுகின்றது. மக்களுக்கு இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் வேண்டாம் என்ற மனநிலையே இருக்கின்றது. இதனால் புதிய அரசாங்கம் அவசியமாகும்.