‘யுக்திய’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும்; ஐ.நா. நிபுணர்கள் வேண்டுகோள்

‘யுக்திய’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும்; ஐ.நா. நிபுணர்கள் வேண்டுகோள்

இலங்கை அரசாங்கம் ‘யுக்திய’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும். அது குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போதைப்பொருளிற்கு எதிரான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதிகாரிகள் உடனடியாக இந்த நடவடிக்கையை இடை நிறுத்த வேண்டும் என்பதுடன் இதனை மீளாய்வு செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட கொள்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்எனவும் ஐ.நா.நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புறக்கணிக்கப்பட்ட சமூக பொருளாதார குழுக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை நிபுணர்கள், கட்டாய இராணுவ புனர்வாழ்வு முகாம்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்துள்ளனர்.

‘யுக்திய’ எனப்படும் நடவடிக்கையின் போது சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )