கிழக்கில் வெள்ளத்தால் 65,000 பேர் பாதிப்பு; வெள்ளக்காடாக மாறிய பிரதேசங்கள்

கிழக்கில் வெள்ளத்தால் 65,000 பேர் பாதிப்பு; வெள்ளக்காடாக மாறிய பிரதேசங்கள்

கிழக்கு மாகாணத்தில் சீரற்ற கால நிலை காரணமாக 20 ஆயிரத்து 700 குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரத்து 102 பேர் பாதிக்கப்பட்டு உறவினர் மற்றும் இடைதாங்கல் முகாமில் தஞ்சடைந்துள்ளதுடன் பல பிரசேத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து தாழ்நிலப்பகுதிகள் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 174.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிபதிவானதுடன் வெள்ளத்தினால் வாகரை கல்லரிப்பு பிரதேசத்துகும் கிரான், புலிபாய்ந்தகல் பிரதேசம் மற்றும் சித்தாண்டி ஈரளக்குளம் பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வாகரை, வாழைச்சேனை, கிரான், செங்கலடி, காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு, வவுணதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை உட்பட்ட பிரதேச செயலக் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களில் வெள்ளத்தினால் 5, 461 குடும்பங்களைச் சேர்ந்த 17,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பாலையடித்தோனா மண்முனை வடக்கு செயலகப்பிரிவிலுள்ள நாவற்குடா, செங்கலடி பிரதேச செயலகபிரிவிலுள்ள எறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 90 குடும்பங்களைச்சேர்ந்த 225 பேர் 5 இடைத்தாங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

மாவட்டத்திலுள்ள குளங்களான உன்னிச்சை, நவகிரி, வாகனேரி, றூகம், வெலியாகந்தை, வடமுனை குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரத்துக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் தமண, இறக்காமம், சம்மாந்துறை ,நாவிதன்வெளி, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர். அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில்,லகுகலை, பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த 14,827 குடும்பங்களைச் சேர்ந்த 46,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் கிட்டங்கி பாலத்தின் மேலால் ஆற்று வெள்ளம் காரணமாக நாவிதன்வெளிக்கும் கல்முனைக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் களியோடை ஆற்றின் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியமையடுத்து பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதுடன் அம்பாறை சேனநாயக்கா சமுத்திரத்தின் 5 வான்கவுகள் 9 அரை அடி உயரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது

இதனால் அம்பாறை மாவட்டதிலுள்ள கரையோரப் பிரதேசங்களான நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலவீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தின் காரணமாக தம்பலகாமம், வெருகல் , குச்சவெளி, கிண்ணியா, சேருநுவர, மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த 412 குடும்பங்களைச் சேர்ந்த 1, 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் கந்தளாய்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வயல்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெருகல் முருகன்கோவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )