குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிலையில் மக்கள்

குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிலையில் மக்கள்

தற்போது சமூகத்தில் பெரியதொரு அவலம் நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கையர்கள் பிள்ளைகளுக்கு சரியாக உணவுகளை வழங்கவும்,வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும் முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது., இந்த அவலத்தை மேலும் ஊக்குவிக்கும் ஒரு ஆட்சியே தற்போது உருவாகியுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 59 ஆவது கட்டமாக கம்பஹா புத்பிட்டிய மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் பேசுகையில்,

அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க ‘வற்’ வரி அதிகரிக்கப்பட்டாலும்,அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க ஒரே வழி ‘வற்’ ஐ அதிகரிப்பது அல்ல,மாறாக நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை நாட்டிற்கு திரும்பப் பெறுவதற்கான கட்டமைப்பை ஸ்தாபிப்பதே பொருத்தமான வழி .திருடர்களை நம்பி ஜனாதிபதி,பிரதமர் போன்ற பதவிகளைப் பெற்றதாலயே தற்போதைய அரசாங்கத்தால் அதனை மேற்கொள்ள முடியாதுள்ளது.எனவே திருடர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக திருடர்களைப் பாதுகாத்து வரும் வேலையையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
தற்போது சமூகத்தில் பெரியதொரு அவலம் நடந்து கொண்டிருக்கின்றது.இலங்கையர்கள் பிள்ளைகளுக்கு சரியாக உணவுகளை வழங்கவும்,வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும் முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது., இந்த அவலத்தை மேலும் ஊக்குவிக்கும் ஒரு ஆட்சியே தற்போது உருவாகியுள்ளது.

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் உள்ளிட்ட மருந்துத் துறையில் சமீபத்தில் நடந்த திருட்டு,ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது, அதனை தோற்கடிக்க 113 எம்.பி.க்கள் கை தூக்கினர் .அவர்களும் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற திருடர்கள் கூட்டமே. அவர்கள் திருடிய வளங்களை மீண்டும் எமது நாட்டிற்கு கொண்டு வர முடியுமாக இருந்தால், இவ்வாறு வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்கள் அரசியல் வாக்குறுதிகளாக மேற்கொள்ளப்படவில்லை .இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் வேலையை மட்டும் செய்வதற்கு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் இருந்தாலும், அவ்வாறு செய்யாமல்,மக்களுக்காக நடைமுறை ரீதியான அபிவிருத்தியின் மூலம் தனது திறனை நிரூபிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுப்பை மேற்கொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )