ரணிலுடன் போட்டியிடுவோரின் மூளையை சோதிக்க வேண்டும்

ரணிலுடன் போட்டியிடுவோரின் மூளையை சோதிக்க வேண்டும்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் போட்டியிடுவதாக இருந்தால் அவர்களின் மூளையை சோதனை செய்ய வேண்டி ஏற்படும் . யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஸவே நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகொள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கிறார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் எம்.பி.யுமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் கூறுகையில்,

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தற்போது பலரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தெரிவிப்பவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வக்கப்டும் திட்டங்கள் என்ன ?.இவர்களின் ஏமாற்று பிரசாரங்களுக்கு மக்கள் ஒருபோதும் ஏமாந்துவிடக்கூடாது.

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை அதில் இருந்து மீட்டு தற்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசி்ங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் இன்னும் 12 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கினால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை தருவார்.

எனவே நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறுயாரும் போட்டியிடுவதாக இருந்தால் அவர்களின் மூளையை சோதனை செய்ய வேண்டி ஏற்படும் . நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முக்கியமானது.. சொகுசு வாழ்க்கைக்காக போட்டியிதும் தேர்தல் அல்ல. நாடு தொடர்பில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டிய தேர்தல் . ஏனைய காலங்களில் போன்று பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரட்டியடிப்பார்கள்.

நாட்டின் தற்போதைய நிலையில் மக்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். ரணில் விக்ரமசிங்கவினாலே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதால்தான் யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஸ ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகிறார் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )