பொது வேட்பாளராக ரணில் பெரமுனவும் ஆதரவளிக்கும்

பொது வேட்பாளராக ரணில் பெரமுனவும் ஆதரவளிக்கும்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாதென .ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாடு வங்குராேத்து நிலையில் அபாய கட்டத்தில் இருந்தபோது நாட்டை பொறுப்பேற்க முன்வராது நழுவிச்சென்றவர்கள் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவிக்கின்றனர். வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தற்போதுள்ள அரசியல்வாதிகளில் ரணில் விக்ரமசிங்கவை தவிர தகுதியான வேறு யாரும் கிடையாது
ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கும்போது அவருக்கு அனைத்து மக்களும் ஆதரவளிப்பர். பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை பெற்றால், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும் என அந்த கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னர் பொது வேட்பாளராக பலர் களமிறங்கி இருக்கின்றனர்.

அப்போது நாங்கள் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர் அதேபோன்று அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவது நிச்சயம். அது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் அவர்களின் இணக்கப்பாட்டை எமக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )