மொட்டு எம்.பி. ஷான் சஜித் பக்கம் தாவல்

மொட்டு எம்.பி. ஷான் சஜித் பக்கம் தாவல்

பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவானார். ஷான் விஜயலால் டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவார்.

இந்தநிலையில்,ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியை உருவாக்கி வருவது யாருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கல்லவென்றும் சிறந்த கொள்கைகள் மற்றும் மக்கள் சேவையின் அடிப்படையிலேயே இவ்வாறு இணைத்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தென் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜேலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்து கட்சி உறுப்புரிமையை பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியை உருவாக்கி வருவது யாருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கல்லவென்றும், சிறந்த கொள்கைகள் மற்றும் மக்கள் சேவையின் அடிப்படையிலேயே இவ்வாறு இணைத்துக் கொள்வதாகவும், இதனை தவறாக புரிந்து கொண்டு அரசாங்கத்துடன் தொடர்புடைய சில ஊடகங்கள் பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் எந்த அமைச்சரும் சுகபோகங்களை அனுபவிக்க முடியாது. மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து மக்களுக்கு தன்னலமற்ற சேவை ஆற்ற வேண்டும். தேவையில்லாமல் வெளிநாட்டு பயணங்களில் சுற்றுவது போன்ற வழக்கமான பொழுது போக்குகளை அவர்களால் மேற்கொள்ள முடியாது. அமைச்சுப் பதவிகளில் விரக்தி மனப்பான்மை எழுந்தாலும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இவ்வாறான தியாகங்களைச் செய்ய வேண்டும்.

மக்கள் பக்கம் நின்று பார்க்கும் போது புத்தாண்டு உதயமாகுவதில் தனக்கு சந்தோஷ நிலைப்பாடு எழுவதாக இல்லை. தானும் தனது குழுவும் நபர்களை அங்கிருந்து இங்கு இழுத்தெடுக்கும் விளையாட்டுகளையோ அல்லது ஆடம்பர ஹோட்டல்களில் இருந்து பணப் பைகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் நட்பு வட்டார முதலாளித்துவத்தை செயல்படுத்துவதற்கோ அல்லாமல் பொது மக்களுக்கு சேவை ஆற்றும் நோக்கிலேயே இந்த கூட்டணியை உருவாக்கும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )