யாழ் குடா கடலில் 2023 இல் 175 இந்திய மீனவர்கள் கைது; 15 படகுகள் அரசுடமையாகின

யாழ் குடா கடலில் 2023 இல் 175 இந்திய மீனவர்கள் கைது; 15 படகுகள் அரசுடமையாகின

யாழ் குடா கடற்பரப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு அத்து மீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 175 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 15 படகுகள் அரசுடமையாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட கடற் தொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ் சுதாகரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர்களின் வருகை குடாக்கடலில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகிறது. இவ்வாறு வருகை தந்தவர்களில் கடந்த வருட இறுதி வரை 27 இந்திய மீனவப் படகுகள் கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் 175 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் 15 படகுகள் அரசுடமையாக்கப்பட்டதுடன் ஒரு படகு மட்டும் விடுவிக்கப்பட்டது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )