சிறைக்கள் நிரம்பி விட்டன என்பதற்காக சுற்றி வளைப்புகள் நிறுத்தப்படமாட்டாது

சிறைக்கள் நிரம்பி விட்டன என்பதற்காக சுற்றி வளைப்புகள் நிறுத்தப்படமாட்டாது

சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்பதற்காக போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதை பொலிசார் நிறுத்த மாட்டார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நெரிசல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எனது அமைச்சு அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்கும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமையால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர்களை கைது செய்வதே பொலிஸாரின் வேலை எனவும் அவர்கள் கைது செய்யப்படும் போது அது தொடர்பான வேலைத்திட்டங்களை ஏனைய நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் அதிகரித்துள்ள நெரிசல் காரணமாக சந்தேக நபர்களை கைது செய்வதை தடுக்க முடியாது எனவும், இது நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பொறுப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அமைச்சுக்களின் விவகாரங்களில் நான் தலையிட வேண்டிய தேவை இருப்பதாகவும், அதனை தாம் கையாள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )