
ஜனாதிபதியுடன் சந்திப்பு எமக்கு அழைப்பில்லை; கஜேந்திரகுமார் எம்.பி.கூறுகிறார்
வடக்கு, கிழக்கு மாகாண தமிழ்எம்.பி.க்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை நடத்தவுள்ள சந்திப்புக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடுவதற்காக கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் பாராளு மன்றக் கட்டிடத்தொகுதியில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சந்திப்பு மீண்டும் இன்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுமெனக் கூறி ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவனினால் தமிழ் எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ்எம்.பி.க்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை நடத்தவுள்ள சந்திப்புக்கு தமக்கு எந்த வித அழைப்பும் விடுக்கப்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

