சஜித்தே பிரதமர் வேட்பாளர் !

சஜித்தே பிரதமர் வேட்பாளர் !

பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவே போட்டியிடுவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியின் தலைமை வேட்பாளராக யார் போட்டியிடுவார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

எந்தத் தேர்தலாக இருந்தாலும் எமது கட்சியின் தலைவரே தலைமை வேட்பாளராக இருப்பார். கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவே இருக்கின்றார். பிரதமர் வேட்பாளராகவும், ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவே போட்டியிடுவார். இதனை விடுத்து வேறு யாரும் நியமிக்கப்படமாட்டார்கள். இதுவே கட்சியின் கொள்கையாக உள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )