யாழில் மாணவனின் செவிப்பறையை கிழித்த ஆசிரியர்

யாழில் மாணவனின் செவிப்பறையை கிழித்த ஆசிரியர்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் அறைந்ததால் தரம் – 10இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியரே மாணவரை தாக்கியுள்ளார்.

மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )