ஆபத்தான கொரோனா திரிபு கண்டுபிடிப்பு

ஆபத்தான கொரோனா திரிபு கண்டுபிடிப்பு

ஹைதராபாத்தை அடுத்து தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் திரிபின் ஒரு வகையான BA.4 கொரோனா என்ற புதியவகை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை தெரிவித்துள்ளார்.

 ஒமிக்ரான் திரிபை ‘கவலைக்குரிய திரிபு’ என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளதால் BA.4 வகை கொரோனாவும் அந்த வகைப்பாட்டில் அடங்கும்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,’செங்கல்பட்டு நாவலூர் பகுதியில் ஒருவருக்கு BA.4 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் சோதனை செய்துள்ளோம். 

இந்த புதிய வகை கொரோனா ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகளவில் பதிவாகியுள்ளது. சமீபத்தில், ஹைதராபாத்தில் ஒருவருக்கு இருந்ததை உறுதிசெய்தார்கள்.

””இந்த கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரான் உள்பட, நான்கு வகை கொரோனா தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. 

பிற மாநிலங்களில் இந்த புதியவகை தொற்று பரவியுள்ளதா என மத்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும்,”என்றார் அமைச்சர் சுப்பிரமணியன். 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )