ஸ்ரீ.பொ.பெரமுனவின் உயர் பதவிகளில் மாற்றம் இல்லை

ஸ்ரீ.பொ.பெரமுனவின் உயர் பதவிகளில் மாற்றம் இல்லை

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாக பதவிகளில் மாற்றம் எதுவும் ஏற்படாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கட்சியின் நிர்வாகப் பணிகள் உத்தியோகபூர்வ அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் அதேவேளை, கிராம மட்டத்தில் கட்சியை மீளக் கட்டியெழுப்புவது தொகுதி மட்டத்தில் தனியான கட்சிகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் தேர்தல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. அந்த தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்த வேண்டும்.

மேலும், சில அரசியலமைப்பு திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதுள்ள கட்சியின் அரசியலமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், கட்சியின் செயற்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )