இந்த வருடம் வழங்குவதாக ஜனாதிபதி கூறிய வடக்கு,கிழக்கிற்கான தீர்வு எங்கே போனது?

இந்த வருடம் வழங்குவதாக ஜனாதிபதி கூறிய வடக்கு,கிழக்கிற்கான தீர்வு எங்கே போனது?

இந்த வருடம் வடக்கு,கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த பிரச்சினை ஒரு சிக்கலானது. யார் ஆட்சியில் இருந்தாலும் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றாலும் ஒரு இறையாண்மையை கட்டியெழுப்ப கடுமையாக உழைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பேசும் தற்போதைய அரசாங்கம்,கொரோனா கால கட்டத்தில் இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தகனமா அடக்கமா என்ற பிரச்சினையைக் கையாண்டது சிங்கள பௌத்த வாக்குகளை இலக்கு வைத்து இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும்,ஐக்கிய மக்கள் சக்திக்கு இவ்வாறான கொள்கை கிடையாது .நாமெல்லோரும் இலங்கையர் என்ற கொள்கையில் முற்போக்கு தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வரு கின்றோம்.

இந்த பிரச்சினையில் நடந்து கொள்ள வேண்டிய முறையை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் கூட அவ்வாறே செயற்பட்டனர் ஐக்கிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளுக்காக முன்நிற்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை உலகிற்கு நாம் முன்வைக்கும் நல்லிணக்கம் நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த வருடம் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த பிரச்சினை ஒரு சிக்கலானது. யார் ஆட்சியில் இருந்தாலும் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றாலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம், சிங்கள சமூகங்களும் நாட்டின் ஏனைய பகுதி மக்களும் ஒன்றிணைந்து ஐக்கிய நாட்டில் இறையாண்மையுள்ள இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் உழைக்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )