
போதகர் ஜெரோமின் சிறை அறையில் பெருந்தொகை தொலைபேசிகள் மீட்பு
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ மற்றும் ‘எச் ‘ அறைகளில் 33 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 35 சிம் அட்டைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தற்போது மெகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய் இரவு இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக உரிய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

