
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்ட இரு பெயர்கள்; இறுதி தீர்மானம் அடுத்த ஆண்டு
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தேசிய மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என கட்சியின் உள்ளக வட்டார தகவவ்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தல்களில் சிறு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைப்பதற்கும், ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கும் தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகள் பிரதான காரணியாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் தெவிரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

