
நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்து யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை! 115 மாணவிகள் 9 ஏ சித்தி
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
8 ஏ பெறுபேற்றை 59 பேரும், 7 ஏ பெறுபேற்றை 22 பேரும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
வெளியான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்சயா ஆனந்தசயனன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
நாட்டில் இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 13,588 மாணவர்கள் 09 ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, க.பொ.சா தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று காலை வெளியாகின.
இதன்படி, www.doenets.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

