நடு வீதியில் நான் கொல்லப்படலாம்; அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு

நடு வீதியில் நான் கொல்லப்படலாம்; அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு

பணம் கொடுத்து என்னை கொலை செய்ய முயற்சிப்பார்கள். நான் நடு வீதியில் வைத்து கொல்லப்படலாம்.அது இன்றோ நாளையோ அல்லது நாளை மறுநாளோ என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு நான் கொல்லப்பட்டால் ஜனாதிபதி மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசேட கூற்றை முன் த்தபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்தில் 134 பேரின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையில் தான் நான் அவருக்கு ஆதரவு வழங்கினேன்.ஊழல் மோசடி பற்றி அதிகம் பேசினார்.அதனால் தான் கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியை பகிரங்கப்படுத்தினேன்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து என்னை குற்றவாளியாக்கும் வகையில் உரையாற்றினார்.

நாமல் ராஜபக்ஸ, சரித் என்பவரை சினமன் கிரேன்ட் ஹோட்டலில் சந்தித்துள்ளார்.’ரொஷான் அண்ணாவை கவனமாக இருக்க சொல்லுங்கள்.ரணில் ஒரு பாம்பு,அந்த பாம்பு எப்போது தீண்டும் என்று குறிப்பிட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.பாம்பு தவறான இடத்தில் படமெடுத்தால் அடிபட நேரிடும்.ஊழல்வாதிகளை அடையாளப்படுத்திய என்னையா தீண்ட வேண்டும்?

நான் நீதிமன்றத்தை அவமதித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்..நான் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை .நீதிபதிகள் சுயாதீனமாக செயற்படுகிறது. என்று குறிப்பிட்டேன்.ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசரின் செயற்பாடுகள் மற்றும் அவரது உறவு நிலை தொடர்பில் கேள்வி எழுப்பினேன்.மறுபுறம் சட்டமா அதிபர் திணைக்களத்தை விமர்சிக்கவில்லை.சட்டமா அதிபரின் மீது நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டேன்.

என்னை சுற்றிவளைக்க வலான குற்றத்தடுப்பு பிரிவு குருநாகல் கலேவல யுரோன் நிபோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனது நிறுவனங்களை சுற்றி வளைக்க வேண்டும்,பரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டால் எனது 8 நிறுவனங்களின் சாவி கொத்தை தருகிறேன்.விசாரணை செய்யுங்கள் எனக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை.

எனது யுரோ நிபோன் நிறுவனத்தில் இருந்து வாகனம் கைப்பற்றட்டுள்ளதாக கடந்த 25 ஆம் திகதி தேசிய பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன.ஆனால் எனது நிறுவனத்தில் இருந்து வாகனம் கைப்பற்றவில்லை.

திருடர்களை பிடித்துக் கொடுத்ததால் என்னை இவ்வாறா நடத்துவது?69 இலட்ச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவையில் உள்ளேன்.மக்களாணையுடன் பாராளுமன்றத்தில் உள்ளேன்.என்னை அமைச்சு பதவியில் இருந்து ஜனாதிபதியால் நீக்க முடியும்.ஊழலை வெளிப்படுத்தியதால் என்னை பழிவாங்க வேண்டாம்.

இன்று அமைச்சராக உள்ள போது நிறைவேற்றுத்துறையால் நான் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளேன்.நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க எனது வாழும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்.எனது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.பணம் கொடுத்து என்னை கொலை செய்ய முயற்சிப்பார்கள்.

நான் நடு வீதியில் வைத்து கொல்லப்படலாம்.அது இன்றோ நாளையோ அல்லது நாளை மறுநாளோ என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு நான் கொல்லப்பட்டால் ஜனாதிபதி மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்.ஒரு அமைச்சராக உள்ள என்னுடைய பாதுகாப்பில் அரசியல் மற்றும் நீதித்துறையின் தலையீடுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

சாகல ரத்நாயக்க விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் வலம் வருவதற்கு 134 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவில்லை.எனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.கிரிக்கெட் பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணாவிட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் தீர்வு காண்பேன்.ஊழல் மோசடி செய்த தரப்பினரை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )