
வாகரையில் இனந்தெரியாத சிலரால் மாவீர் நினைவு கல்வெட்டுக்கள் உடைப்பு
போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் வகையில் மட்டக்களப்பு வாகரை கண்டிலடியிலுள்ள மாவீர் நினைவு கல்வெட்டுக்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
நாளை திங்கட்கிழமை 27 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு வாகரையிலுள்ள கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணிகள் இடம்பெற்றது. குறித்த காணியை சுற்றி கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்றைய தினம் இனந்தெரியாத சிலரால் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவு கல்வெட்டுக்கள் மற்றும் கொங்றீட் தூண் என்பன அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மாவீரர் நினைவேந்தலை தடுக்கும் செயற்பாடாக கருதுவதாக மாவீரர் தின ஏற்பாட்டு குழு தெரிவித்தள்ளது.