ஐங்கரநேசனுக்கு சவால் விடுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐங்கரநேசனுக்கு சவால் விடுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் (25) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினுடைய தலைவர் ஐங்கரன்நேசன் தமிழ் கட்சிகளின் ஒழுங்கு செய்யப்பட்ட மனித சங்கிலியைப் பற்றி அவர் நார் நாராக கிழித்து போட்டு இருக்கிறார். இவர் இவ்வாறு கூறுகின்ற விடயம் எல்லாம் தொடர்ச்சியாக நாங்கள் எட்டு கட்சிகள் சேர்ந்து ஒரு பொது வேலை நிறுத்தம் ஹர்த்தாலையும் செய்திருந்தோம்.

அதிலே அவர் குறிப்பிடுகின்ற போது மனித சங்கிலி போராட்டம் தோல்வியிலே நிறைவடைந்து இருக்கின்றது, தலைவர்கள் வேட்டி கசங்காமல் போராடுகின்றார்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கூறியிருக்கிறார், நான் கேட்க விரும்புகின்றேன் இவ்வாறு கூறியவர் ஹர்த்தாலைப் பற்றி மூச்சு விடவில்லை, அதிலிருந்து இது வெற்றி பெற்று இருக்கின்றது என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை மனித சங்கிலி போராட்டம் பெறவில்லை என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே கூறி இருந்தோம். ஆனால் இவர் கூறுவது போன்று பிசுபிசுத்து விட்டது, போன்ற காரியங்களை கூறியது மாத்திரமல்ல இன்னுமொரு உண்ணாவிரதத்தை பற்றி குறிப்பிட்டு அதிலே ஒரு கட்சித் தலைவர் உண்ணாவிரதத்தில் காலையில் இருந்தார் மதியம் 11 மணிக்கு மீன் சந்தையிலே நின்றார் தொடர்ந்து மாலையில் உண்ணாவிரதம் முடிக்கும் போது இருந்தார் என்று எல்லாம் கூறி இருந்தார்.

நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் அப்படி என்றால் இவரும் அந்த மீன் சந்தைக்கு போய் இருக்கின்றார் என்று தானே அர்த்தம், யார் அந்த தலைவர் என்று பகிரங்கமாக சொல்லட்டும் அதை விடுத்து விடுகதை சொல்லுவது போன்று சொல்லுவதில் அர்த்தமில்லை,

ஆகவே இவர்கள் ஏதோ பசுமை என்று வைத்துக்கொண்டு கட்சி என்று வைத்துக்கொண்டு செல்லுகின்ற விடயங்களுக்கெல்லாம் நாங்கள் பாத்தரவாளிகளாக ஆக முடியாது.

இவ்வாறு பிரச்சனை வரும் என்று அஞ்சி கொண்டிருக்கக் கூடியவர் இன்றைக்கு மனிதச் சங்கிலியிலே, நீங்கள் கலந்து கொள்கின்ற ஒரு சில போராட்டங்களிலே பஸ்ஸில் ஏற்றி வருகிற ஐம்பது, 100 பேருடன் நடைபெறுகின்ற போராட்டம் அல்ல ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பல இடங்களிலே கூடி நின்று தான் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது,

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார்கள். அது மாத்திரமல்ல அவர்கள் தங்களுடைய தலைமைச் செயலகம் அமைந்திருக்கின்ற கொக்கில் பகுதியில் அவர் திரண்டு சங்கிலியாக நின்றிருந்தார்கள்.

முதலாவது மனித சங்கிலி ஆனது நீதிபதி சரவணராஜாவுக்காக நடத்தப்பட்ட மனித சங்கிலி அந்த மனித சங்கிலியிலே முல்லைதீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இருந்தும் சட்டத்தரணிகள் பெருமளவில் நின்றதை இவர் பார்க்கவில்லையா?” என அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )