
செஞ்சோலை
2006ஆகஸ்ட்14 அதிகாலை விடியல் வழமைக்கு மாறான அமைதியுடன் காணப்பட்டது.ஏதோ துக்க நிகழ்வொன்று நடைபெறும் முன் தோன்றும் அசாதாரண அமைதி.இயற்கையும்நடக்கவிருக்கும் அனர்த்தத்தின் முன்னெச்சரிக்கை தந்ததோ என்னவோ.
வழமைபோல மக்கள் தம் அன்றாட வேலைகளில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தனர்.அங்கே, செஞ்சோலை சிறுவர் இல்லவளாகத்தில் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி பயில்கின்றமாணவிகளுக்கான அனர்த்த முகாமைத்துவ
முதலுதவிப் பயிற்சி2006ஆகஸ்ட் 10ம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
2006ஆகஸ்ட் 14 அன்று, தலைமைத்துவப் பயிற்சியின் 4வது தினத்திற்குரிய பயிற்சிப் பட்டறைக்குச் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் பிள்ளைகள்.எப்போதும் போல மாணவிகள் கலகலப்பும் சிரிப்புமாகபயிற்சிக்கு ஆயத்தமாகினர். காலை 7.30மணியளவில் ஒலியைவிட வேகமாக, பேரிரைச்சலுடன் வந்தநான்கு கிபிர்விமானங்கள் பொழிந்த குண்டுமழையில்செஞ்சோலை வளாகமேசெந்நிறமாகியது.
சிரித்து மகிழ்ந்து,நாளைய எதிர்காலத்தின் கண்மணிகள் சிந்திய
இரத்த வெள்ளத்தில்சதைப்பிண்டங்கள் சிதறுண்டு கிடந்தன.
அழுகுரல்கள்மட்டுமேகேட்டன. அந்தக்கணத்தை விபரிக்க எம்மிடம் வார்த்தைகளில்லை. 17 ஆண்டுகள் கடந்தும் மறக்கவோ,மன்னிக்கவோ முடியாதது பள்ளிச் சிறுமிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் கொடூரத் தாக்குதல்.
இதன்போதுஇரண்டு பணியாளர்கள் உட்பட 61மாணவிகள் என63பேர்அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.155 இற்கும் மேற்பட்டமாணவிகள் படுகாயமடைந்தனர். இதில் மூவரின் கால்கள்துண்டிக்கப்பட்டதுடன், ஒரு மாணவி கண் ஒன்றையும் இழந்திருந்தார்.
பள்ளிச் சிறுமிகள் கொல்லப்பட்ட செஞ்சோலைப் படுகொலை நினைவுநாளை வலியுடன் நினைவு கூருகிறோம். காயப்பட்ட மாணவிகளில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.ஆனால் மனித நேயமற்ற சிறிலங்கா அரசு மூவரையும் கைது செய்து விசாரிக்க முடிவு செய்தது.பின் அவர்களை திருப்பி வன்னியிலுள்ள அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி,வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பியது.
அதில் ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.மீளவும் இரு மாணவிகளையும் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் அவர்கள் பற்றிய தகவல் எதுவும்தரப்படவில்லை. ஆனால் மாணவிகளின் பெற்றார் ஒழுங்குபடுத்த பட்ட இடத்தில் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
செஞ்சோலையில் குண்டு வீசிய அன்று சிறிலங்கா அரசு செய்திகளில் விடுதலைப் புலிகளின்பயிற்சி முகாமை தாக்கியதாக செய்தி
வெளியிட்டது. இதனை விடுதலைப்புலிகள் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்,இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு,யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனிதஉரிமைகள் அமைப்பு ஆகியன அது புலிகளின் பயிற்சி முகாமல்ல என்பதை திட்டவட்டமாக தம் அறிக்கைகளில் சுட்டிக்காட்டினர்.ஆனால்
அதனை நிராகரித்த சிறிலங்கா அரசு 2004இலிருந்து கண்காணிப்பதாகவும்
அதுபயிற்சி முகாம் தான், தவறான இலக்கல்ல என்றும் கூறியது.
செஞ்சோலை மீதான தாக்குதல் இலங்கையரசின் நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான செயலையே காட்டுகிறது என தமிழ்நாடு சட்டமன்றம்தீர்மானம் நிறைவேற்றியது.யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமையமைப்பு இது முதலுதவி பயிற்சி நடைபெற்ற இடமெனவும் இங்கு பயிற்சி பெற்றவர்கள்சிறுவர்களேயன்றி போராளிகள் அல்லர் என்றும் கூறினர்.
ஐக்கிய நாடுகள் சபைசெய்தியாளர்கள் கூறுகையில் இங்கு முதலுதவி பயிற்சிமுகாமே நடைபெற்றது.இதில் 15-18வயதுக்குட்பட்ட கிளி/முல்லை மாவட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் உயர்தர மாணவிகளே பங்குபற்றினர் எனக் கூறினார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது கொடுரமானதும் மனிதாபிமானமற்றதுமான இனப்படுகொலை எனக் கூறியது.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த யுனிசெப் அலுவலக ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று,மாணவிகளை சிகிச்சைக்கு அனுப்புவதில் முன் நின்றனர்.இதன் நிர்வாக இயக்குனர் வெனிமேற் கருத்துக்கூறுகையில்இந்தக்குழந்தைகள் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள்என்றார்.அந்த நிறுவனத்தின் ஊழியரான வான் கெர்ப்பன் அவர்கள் இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரமுமில்லை என்றார்.
போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின்தலைவரான சுவீடன் இராணுவத்தில் ஓய்வு பெற்ற அதிகாரியுமான உல்ஃபா என்றிக்சன் கூறும் போது தனது ஊழியர்கள் இறந்தவர்களை எண்ணி முடிக்கவில்லை என்றும்,சம்பவ இடத்தில் போராளிகளின் முகாம்கள் அல்லது ஆயுதங்களின் எந்த அடையாளத்தையும் காணவில்லை என்றார்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பாடசாலை மாணவிகள் தான் என்பதை கிளி/முல்லை மாவட்டங்களின் கல்விப்பணிப்பாளர்கள் உறுதிப்படுத்தினர். இம் மாணவிகளில் பெரும்பாலான மாணவிகள் உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். இதில் 400மாணவிகளில் தலைமைத்துவ முதலுதவிக்கு தெரிவாகிய மாணவிகளே இவர்கள்.
இவர்களுக்கான பயிற்சி நெறி2006 ஆகஸ்ட்11தொடக்கம் 2006 ஆகஸ்ட்20 வரை நடைபெற இருந்தது. இதனை கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட ‘WOMAN’S REHABILITATION AND DEVELOPMENT’ (CWRD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.
அன்று 17 வருடங்களுக்கு முன் எழுந்த எம் குழந்தைகளின் கதறல்கள் எவர் காதிலும் கேட்கவில்லை.இன்று வரை இது மக்கள் மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்திய காயமாகும்.அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்.
அன்று எம்பிஞ்சுக்குழந்தைகள்தலையில் குண்டு போட்ட சிறிலங்கா அரசுக்கு விமானியாகசெயல்பட்டது உக்ரைன் நாட்டு விமானிகளாகும்.
அன்று நாம் அனுபவித்த அதே வேதனையை அனுபவிக்கும் போது தெரியும் எம் வலியின் கனம். ஆனால் நாம் அங்கு பாதிக்கப்படும்
பொதுமக்கள் மீது ஆழ்ந்த மன வருத்தம்கொண்டுள்ளோம். எனினும் 2009 இல் எம் மீது குண்டுமழை பொழிந்த போது அத்தனை நாடுகளும் கோமாவில்இருந்தீர்களா?இன்று தான் விழித்துக் கொண்டிர்களா?
உலகின் போரின் போது பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.போர்ச் சூழலில் வாழ்ந்த எமக்குஅதன் தார்ப்பரியம் புரியும்.எனினும் ஏதோ சில அரசுகளின் சுயநலனுக்காக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும்,காயமடைந்தும்,ஊனமுற்றும்,காணாமலும் போகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் எம் தமிழீழ மக்களுக்காய் ஒரு சொட்டு கண்ணீர் விட மறந்து போனது உலகநாடு.
இதே உக்ரைன் நாட்டைச் சார்ந்த பெண்விமானியே எங்கள் மீது குண்டு வீசி இனப்படுகொலைக்கு வழிவகுத்தவர். அன்று அவர்கள் செய்தது நியாயமானது என்றால்இன்று இரஷ்யா செய்வதும் நியாயமானதே.
உக்ரைன் தொடர்பான காணொளிகள் பார்க்கும் போது மனதைநெருடினாலும், எங்களுக்கு இழைக்கப்பட்டதை எண்ணினால்….? ஏனெனில்
இன்று நாம் யுத்த பூமியின் வடுக்களாய் வாழ்கிறோம்.
‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்’
செஞ்சோலையில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த அனைவருக்காகவும்
ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்.
-பவானி.