
பொன்னம்பலத்தின் பேரனும் ஈ.பி.டி.பி.யின் நிலைப்பாட்டில்; அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை பொன்னம்பலத்தின் பேரனும் ஆதரிக்கிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் யதார்த்தமான நடைமுறை சாத்தியமான விடயங்களையே முன்னகர்த்தி வருகிறது.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது இன்று நேற்று நாம் வலியுறுத்திய விடயம் அல்ல. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனும் அந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவது வரவேற்கத்தக்க விடயம்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இரண்டு போராட்டங்களுக்கான அழைப்பை தமிழ் கட்சிகள் சில வெளியிட்டன.இரண்டு போராட்டங்களும் பிசுபிசுத்துப் போன நிலையில் இது எமது மக்களின் எதிர்காலத்தை பின்னோக்கி நகர்த்துவதாக அமைந்துவிட்டது.
போராட்டங்கள் மனித குலத்திற்கு அவசியமான நிலையில் நன்மைகளை வரவேற்று தீமைகளை எதிர்க்க போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் தேவை .
அதற்கு தமிழ் பேசும் சமூகம் விதிவிலக்கல்ல. தமிழ் மக்கள் சார்ந்து இரண்டு விடயத்தை சொல்லலாம். கடைசியாக நடந்த கதவடைப்பு மற்றும் மனித சங்கிலியை கூறலாம்.
கதவடையிப்பிற்கு எதிராக எமது உறுப்பினர்கள் முகநூலில் எதிர்பினை வெளியிட்டார்கள். ஆனால் நான் எனது முகநூலில் எழுதியிருந்தால் அது 100 இருநூறு வீதம் உண்மையானது.ஆகவே என்னுடைய முகநூலில் வரும் கருத்துகளே அதிகாரபூர்வமானது.
ஆகவே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனக் கூறும் தமிழ் கட்சி உண்மையான நிலைப்பாட்டை கூறினாலும் அக் கட்சியிடம் கொள்கை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.