பதவி விலகவேண்டும் என ஐ.நா.செயலாளரை மிரட்டும் இஸ்ரேல்

பதவி விலகவேண்டும் என ஐ.நா.செயலாளரை மிரட்டும் இஸ்ரேல்

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பை வழிநடத்துவதற்கு அவர் தகுதியானவர் அல்லர் என்று ஐ.நா. வுக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டன், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் குட்டெரெஸுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பையும் அவர் இரத்துச் செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு பாடம் கற்பிப்பதற்காக ஐ.நா. அதிகாரிக்கு விசா வழங்குவதற்கு இஸ்ரேல் மறுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்ட கருத்துக்களிற்கு பாடம் புகட்டுவதற்காக ஐநா அதிகாரிக்கு அனுமதிவழங்கப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகளின் மனிதாபிமான செயலாளர் மார்ட்டின் கிரிவ்வித்ஸ் இஸ்ரேலிற்கு விஜயம் மேற்கொள்வதற்கே விசா வழங்க இஸ்ரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

ஐக்கியநாடுகளிற்கான இஸ்ரேல் தூதுவர் கிலாட் எர்டான் தனது உரையின் போது நாங்கள் ஐநா பிரதிநிதிகளிற்கு விசாவை மறுப்போம் என தெரிவித்திருந்தார். நாங்கள் ஏற்கனவே ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களிற்கான அதிகாரிக்கு விசாவை வழங்க மறுத்துள்ளோம் ஐநாவிற்கு பாடம் புகட்டுவதற்கான தருணம் வந்துள்ளது என தெரிவித்துள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து ஹமாஸிற்குக் கண்டனம் தெரிவித்த குட்டெரஸ், காசாவில் அனைத்துலகச் சட்டம் மீறப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

காசா குடியிருப்பாளர்களைத் தென்பகுதிக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டுப் பின்னர் அதே பகுதியில் இஸ்ரேல் வெடிகுண்டு வீசியதை அவர் சாடினார்.

அதில் பேசிய ஐ. நா.தலைமைச் செயலாளர் குட்டெரஸ் இஸ்ரேலிலும் காசாவிலும் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )