போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

போராட்டத்தில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை போக்குவரத்து பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தியில் மனித சங்கிலி போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்டத்தரணிகள் உள்ளிட்டோர் , நீதி தேவதையின் உருவ சிலைக்கு கறுத்த துணி கட்டி , நீதி தேவதையின் கையில் உள்ள தராசு ஒரு பக்கமாக தாழ்ந்து இருக்க கூடியவாறு , நீதி தேவதையின் உருவ சிலையை காட்சி படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்யாது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதில் போக்குவரத்து பிரிவுப் பொலிஸார் ஈடுபட்டிருந்தமை சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )