
யாழில் மனித சங்கிலி போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதி டி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில், யாழ் கொக்குவில் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும், மனித சங்கிலிப் போராட்டமானது யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் தரப்பினர் என பலரும் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.