மகிந்த நலமாக இருக்கிறார்

மகிந்த நலமாக இருக்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுகயீனமுற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்துடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு பாமன்கடை பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் நேற்று மதகுருமார்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ள காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )