
10 இலட்சமாவது உல்லாசப் பயணி
இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு நேற்று விஷேட தினமாகும். பத்து இலட்சமாவது உல்லாசப்பயணி நேற்று 27ம் திகதி
கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கை வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டமிடல், அபிவிருத்தி பணிப்பாளர் பிரசாத் ஜயசேகர தெரிவித்தார்.
பத்து இலட்சம் இலக்கை தாண்டிய உல்லாசப் பயணியாக ரஷ்ய நாட்டவரான அலெக்ஸ் அவரது மனைவி, இரு பிள்ளைகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
2019 பின்னர் இன்றுடன்(நேற்று) இலங்கை வந்துள்ள உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் இலக்கை ௧டந்துள்ளது. ௧டந்த காலங்களில் இடம்பெற்ற எரிபொருள் தட்டுப்பாடு, மின்துண்டிப்பு, ‘அரகலய’ போராட்டம் என்பவற்றினால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்து அது பூச்சிய மட்டத்தை அடைந்தது. அதன் பின் 15 மாதங்களில் பத்து இலட்சம் சுற்றுலாப்பயணி எனும் இலக்கை அடையக் கிடைத்தது சுற்றுலாத் துறையின் வெற்றியாகும். சகல தடைகளையும் தாண்டி இத்துறையை முன்னேற்றி இவ்வருட இறுதிக்குள் 16 இலட்சம் உல்லாசப் பயணிகளை நாட்டிற்குள் கொண்டுவருவதே எமது அடுத்த இலக்கு எனக் கூறினார்.

