சர்வதேச குழுவின் முன் சாட்சியமளிக்கத் தயார்

சர்வதேச குழுவின் முன் சாட்சியமளிக்கத் தயார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க தயார் எனத் தெரிவித்துள்ள ஆசாத் மௌலானா,இந்தத் தாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது எனவும் , இந்த ஆவணப் படத்தால் பல கட்டுரைகளும் ஆசிரியர் தலையங்கங்களும் எழுதப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்ற வேண்டுகோள்கள் எழுந்துள்ள அதேவேளை பல போலிச் செய்திகளும் வதந்திகளும் வெளியாகியுள்ளன. எனது குடும்பத்தினரை அவதூறு செய்துள்ளனர். அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் பிள்ளையானிற்காக பணிபுரிந்த போதிலும் நான் ஒரு ஆயுதமேந்திய போராளி இல்லை எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

நான் ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்த பழகவில்லை எனக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலும் பல விடயங்கள் தெரியும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )