நானே இலக்காக இருக்கின்றேன்

நானே இலக்காக இருக்கின்றேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்று விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் இந்தளவுக்கு விவாதம் நடத்தப்பட்ட விடயம் வேறு எதுவும் இருக்காது. இதில் நானே இலக்காக இருக்கின்றேன். தாக்குதல் நடந்த நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்துள்ளேன். இதன்போது புலனாய்வு பிரிவோ, பாதுகாப்பு தரப்பினரோ எனக்கு அறிவிக்கவில்லை. இதனை மக்கள் நம்புகின்றார்கள் இல்லை. நான் தெரிந்துகொண்டே வெளிநாட்டுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கின்றனர். இதன்படி நானே பொறுப்பு கூற வேண்டியவர் என்றும் கூறுகின்றனர்.

7 பேர் கொண்ட நீதியரசர்களை கொண்ட வழக்கு விசாரணையில் எனக்கு தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். நான் 2016 ஆம் ஆண்டு முதல் எனக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு சபையில் கூறியுள்ளேன். சர்வதேச நாடுகளில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல்களை நடத்தும் போது இங்கு இவ்வாறு நடக்க இடமளிக்க கூடாது என்று நான் அடிக்கடி பாதுகாப்பு சபையில் கூறியுள்ளேன்.

சஹ்ரானை கைது செய்யாமை தொடர்பில் கூறுகின்றனர். அவரை கைது செய்யவென அதிகாரிகள் இருக்கின்றனர். அதற்கு ஜனாதிபதி போகப் போவதில்லையே. நான் 2019 ஜனவரியில் நடந்த பாதுகாப்பு சபையில், அவரை கைது செய்யாது இருக்கின்றமை தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளேன். அத்துடன் ஒரு வருடமே பொலிஸ் அமைச்சு இருந்தது. கிடைத்து 6 மாதத்திலேயே குண்டு வெடித்தது. இவ்வாறு குண்டு வெடிக்க முன்னர் நான்கு வருடங்கள் என்னிடம் பொலிஸ் அமைச்சு இருக்கவில்லை. சம்பவம் நடந்த பின்னர் சஹரானுடன் தொடர்புடைய முழு அமைப்புகளையும் இல்லாமல் செய்துவிட்டேன்.

இதேவேளை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை மாத்திரமல்ல, ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுவின் ஊடாகவும் விசாரணைகளை நடத்துமாறு கோருகின்றேன். சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் ஐநாவிடமும் நாங்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கேட்கின்றேன்.

அத்துடன் சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றறனர். இங்கு விவாதங்களைள நடத்தி இன்னும் பணத்தை செலவழிக்க தேவையில்லை. என்மீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்களுக்கு பதிலளிக்கின்றேன். பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன். நான் வழங்கியது வேண்டாம் என்றால் அந்த பதவியை இல்லாமல் செய்துகொள்ள வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன். இந்நிலையில் சிலஇராணுவ அதிகாரிகள் என்னிடம் அவர் பற்றி கூறுவர். யுத்தம் செய்வதாக கூறிக்கொண்டு கிளிநொச்சி வரும் அவர் கொங்கிரிட் பங்கருக்குள் இருப்பார்.அவர் யுத்த களத்திற்கு சென்றவர் அல்ல என்றார். நாய் மனித கால்களை கடிக்கும் ஆனால் மனிதன் நாயின் காலை கடிப்பதில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )