
சீனாவின் இன்னொரு கப்பலும் ஜனவரியில் இங்கு வருகிறது; இலங்கை கடல் பற்றிய ஆராய்ச்சியில் சீனா ஏன் ஆர்வமாக உள்ளது?
இலங்கைக்கு அ க்டோபர் 26 ஆம் திகதி சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யாங் 6 வரவிருக்கும் நிலையில் , அடுத்த வருடம் ஜனவரியிலும் ‘சியாங் யாங் ஹொங் 03’ என்ற மற்றொரு கப்பலையும் இலங்கை துறைமுகத்தில் நிறுத்த சீனா திட்டமிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை யை கையாளுபவர்கள் தந்திரமான சூழ்நிலையில் தங்கள் நலன்களை பிராந்தியத்தில் உள்ள ஏனைய செயற்பாட் டாளர்களுடன் , குறிப்பாக இந்தியாவுடன் சமநிலைப்படுத்துவதுதொடர்பான புவிசார் அரசியல் கவலைகளைத் தூண்டும்.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (நாரா ) இணைந்து இந்துசமுத்திரத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ஷி யாங் 6 ரக கப்பலை அக்டோபரில் இலங்கைக் கடற்பகுதிக்குள் வருவதற்கு இலங்கை அனுமதித்திருந்தது.
நாராவின் அதிகாரிகள் குழுவொன்று ஷி யாங் 6 இல் ஆய்வு நடவடிக்கைகளை அவதானிக்கவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரமொன்று தெரிவித்தது, இதுமுழு செயல்முறையிலும் என்ன நடக்கிறது என்பதையும் அது எந்தவொரு மூன்றாவது நாட்டிற்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தவும்சீனாவுடன் முரண்படும் நாடுகளுக்கு சமிக்கை விடுக்கும் அரசாங்கத்தின் முயற்சியாக பரவலாக நோக்கப்படுகிறது .
ஒருநாடு என்ற ரீதியில் இலங்கை, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய அனைத்து முக்கிய நாடுகளுடனும் சமமான உறவுகளை நாடுகிறது. அது நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்துகிறது. எவ்வாறாயினும், இந்துசமுத்திரத்தின் பரந்த கடற்பரப்பின் தகவல்களை முறையாக பெற்றுக்கொள்வது சீனாவின் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகுமென இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கைக் கடற்பரப்பில் சீன கடல்சார் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் கொண்டுள்ளன. செயற் பாட்டின் போது சேகரிக்கப்படும் கடல்வளத் தரவு, பின்னர் பாதுகாப்பு தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ஆயினும் கூட, இலங்கையானது அனைத்து நாடுகளுக்கும் திறந்திருக்கும் ஒரு நடுநிலையான இடம் என்றும், அது கடல், வான்வெளி அல்லது நிலம் எனஎதுவாக இருந்தாலும், மற்றொரு நாட்டின், குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக தனது பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்காது என்றும் கொழும்பு வலியுறுத்துகிறது.
ஆயினும் , இந்தியா நிச்சயமற்ற நிலையாக கருதுகிறது. இலங்கையின் நடுநிலையான நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது ஆனால் பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள இலங்கைக்கு அவ்வாறான அணுகுமுறையைப் பேணுவதற்கான பலம் உள்ளதா என்பது இந்தியாவுக்கு சந்தேகமேமேயென இந்திய விவகாரங்களுடன் நன்கு பரீட்சயமான உயர்மட்ட வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவையே உதாரணமாக அது குறிப்பிட்டது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குகிறது. இந்தியா தனது நலன்களைப் பாதுகாப்பதில் எந்த அழுத்தத்தையும் எதிர்க்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதால் இந்தியா இவ்வாறு செயற் பட முடியும். அந்த [ சக்தி ]இலங்கைக்கு இருக்கிறதா?
சீனா தனது ஆராய்ச்சிக் கப்பல்களை அனுப்புவதில் உறுதியாக இருப்பதாக அறிய வருவதாக ‘டெய்லி மிரர்’ தெரிவித்துள்ளது.

