தெற்கில் இந்தியத்  துணைத் தூதரகம்

தெற்கில் இந்தியத்  துணைத் தூதரகம்

நாட்டின் தென் பகுதியில் இந்தியாவின் துணைத் தூதரகமொன்று திறக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தொட்டை, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் நீதித்துறை அதிகார எல்லைக்கு உட்பட்டவாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவின் கொன்சியூலர் ஜெனரல் ஹர்விந்தர் சிங் , ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலுடன் நட்பு ரீதியான சந்திப்பொன்றை ஊவா மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நடத்தியுள்ளார்.

இதன்போது ஊவா மாகாணத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்தப்  பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

இந்சந்திப்பில் ஊவா மாகாண சபையின் பிரதம செயலாளர் தமயந்தி பரணகம மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )