
ஜனாதிபதி,பிரதமர் பதவிக்கு சஜித், அனுர போட்டி!
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வேட்பாளரானால் பொதுத் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்று சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையென்றால் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும், சஜித் பிரேமதாச பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இருவருக்கும் இடையே இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாது எதிர்க்கட்சிகள் இரண்டு வேட்பாளர்களை களமிறக்கினால் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் எதிர்க்கட்சிகள் துண்டுகளாக பிரிவடையாது இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி பயணிக்க வேண்டும் என்று அவர் ஊடக சந்திப்பொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

