டயஸ்போராக்களுக்கு எதனையும் வழங்காதீர்; வழங்குவோரை விரட்டியடிக்க நேரிடும்

டயஸ்போராக்களுக்கு எதனையும் வழங்காதீர்; வழங்குவோரை விரட்டியடிக்க நேரிடும்

டயஸ்போராக்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களை விரட்டியடிக்க நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அனைத்து கட்சிகளிலும் சிறந்த அரசியல் தலைவர்கள் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மகாநாயக்க தேரர்கள் மற்றும் மதத்தலைவர்களும் இணைந்து அனைவருமாக செயற்பட வேண்டும். அத்துடன் மேல் நீதிமன்ற நீதியரசர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்து அவர்களுடன் இணைந்து அடுத்த தேர்தலுக்கு முன்று மாதங்களுக்கு முன்னர் ஊழல், மோசடிக்காரர்களை அரசியலில் இருந்து விரட்டியடித்து புதிய முறையில் செல்ல புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இது சிங்கள இராஜதானி.இங்கு அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும். அதேபோன்று டயஸ்போராக்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்க வேண்டாம் என்று கோருகின்றேன். அவ்வாறு விற்றால் அடுத்த வருடத்தில் நானும் தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது அதனுடன் தொடர்புடையவர்களை அடித்து விரட்டுவோம் என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )