
கம்பளையில் முக்கியப் பிரமுகரின் வருகையால் பட்டினி கிடந்த குடும்பம்
நாட்டின் முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த வீதியொன்றின் முன்னால் வந்த தந்தையும் சிறு பிள்ளையும் அந்த முக்கியஸ்தர் செல்லும் வரை வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் கம்பளை வாரியகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் மதிய உணவை இழக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தலதா பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்காக கண்டிக்கு வந்துள்ள இந்த பிரமுகர், பெரஹரா ஆரம்பிப்பதற்கு முன்னர், வாரியகல பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மதிய உணவு அருந்துவதற்காக சென்றுள்ளார்.
பிரமுகர் யாருக்கும் தெரிவிக்காமல் இந்த பகுதிக்கு வந்துள்ள நிலையில், அப்பகுதி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையில், அப்பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மதிய உணவிற்கு பலாக்காய் ஒன்றை எடுத்துக்கொண்டு, பிரமுகர் பயணித்த வழியாக குழந்தையுடன் வந்துள்ளார்.
இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.
மூன்று குழந்தைகளும் மனைவியும் பசியுடன் இருப்பதால், பலாக்காய் ஒன்றை எடுத்துச் செல்வதாக அவர் பெலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த தந்தையையும், குழந்தையையும் அழைத்துச் சென்ற பெலிஸார் முக்கிய பிரமுகர் அப்பகுதியை விட்டு வெளியேறும் வரையில் காவலில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அன்றைய தினம் மதியம் தானும் மனைவியும் 3, 7 மற்றும் 9 வயதுடைய பிள்ளைகளும் பட்டினியால் வாட நேர்ந்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
அவர்களின் வீடு புடவை மற்றும் சீட்டுகளால் ஆனது என்றும் தனக்கு வேலை இல்லை என்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.

