கச்சதீவை வைத்து மோடி அரசியல் விளையாடுகிறார்

கச்சதீவை வைத்து மோடி அரசியல் விளையாடுகிறார்

கச்சதீவு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய கருத்துகளை மியன்மாருக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா விமர்சித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் ஜலசந்தியில் உள்ள 285 ஏக்கர் மக்கள் வசிக்காத தீவு கச்சதீவு. இது 1.6 கி.மீ. நீளத்திற்கு மேல் இல்லை அதன் பரந்த இடத்தில் 300 மீ அகலத்திற்கு சற்று அதிகமாக உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தென்னிந்திய ஆதரவைப் பெறுவதற்காக இந்தியத் தலைவரின் இந்த அறிக்கை அமைந்திருப்பதாக பேராசிரியர் நளின் டி சில்வா கூறியுள்ளார்.

கச்சதீவில் நடைபெறும் வருடாந்த புனித அந்தோனியார் உற்சவத்தில் விசா இல்லாமல் இந்தியர்கள் கலந்து கொள்ளலாம் என சுட்டிக்காட்டிய முன்னாள் இராஜதந்திரி, இந்திய மீனவர்களின் ஊடுருவலை இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று   கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 10-ம் திகதி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா விவாதத்தின் போது தனது உரையில் கச்சதீவு பற்றி பேசினார். ராகுல் காந்தியை கடுமையாக தாக்கிய பிரதமர் மோடி, 1974-ல் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது இந்திரா காந்தி அரசுதான் என்று கூறினார்.

“கச்சதீவு தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ஒரு தீவு. யாரோ அதை வேறு நாட்டுக்குக் கொடுத்தார்கள். இந்திரா காந்தியின் தலைமையில் அது நடந்தது,” என்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினின் பல புகார்களை அடுத்து பிரதமர் இந்த விவகாரத்தை எழுப்பினார்.

கச்சதீவை கை மாற்றியதன் மூலம் தமிழக மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )