மேர்வினை சந்திக்கத் தயாராக இருக்கிறோம்; சிறீதரன் எம்.பி.

மேர்வினை சந்திக்கத் தயாராக இருக்கிறோம்; சிறீதரன் எம்.பி.

பௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப் போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுவதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இது பலிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இது தொடர்பில் சிறீதரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

1985இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய செவ்வியொன்றில்,“நாங்கள் ஆயுதங்களை விரும்பி தூக்கவில்லை. எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டது” என்று கூறினார்.

ஆகவே மீண்டும் ஆயுதங்களை எங்களுடைய கைகளில் திணிக்க வேண்டுமென மேர்வின் சில்வா போல, சரத் வீரசேர போல, விமல் வீரவன்ச போல ஆட்கள் நினைக்கின்றார்கள் என்றால் அப்படியொரு சந்தர்ப்பத்தை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்.

அவர்கள் தலையை கொய்தால் நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று மேர்வின் சில்வா கருதுவது இந்த நவீன உலகத்திற்கு பொருந்துமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )