
கின்னஸ் சாதனை படைத்துள்ள சஜித்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத வேறு ஒருவரிடம் ஒப்படைத்த உலகின் முதல் சந்தர்ப்பம் இது எனவும், எனவே சஜித் பிரேமதாச இந்த விடயத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் மற்றுமொருவருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குமாறு அழைப்பு விடுத்தது உலகில் முதல் தடவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மறுத்தமை கின்னஸ் சாதனை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கத்தின் 36 ஆவது வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி என்னை நாட்டைப் பொறுப்பேற்க அழைத்தார். நான் பதவிகளைக் கேட்கவில்லை. ஆனால் நாடு நெருக்கடியில் இருந்தது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், நான் நாட்டை இருந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். .நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகளை ஒரு மாதத்திற்குள் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

