இன விடுதலை தேடி; முள்ளிவாய்க்கால் நோக்கி  நடை பவணிகள்

இன விடுதலை தேடி; முள்ளிவாய்க்கால் நோக்கி நடை பவணிகள்

இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவணிகள் நேற்று (17) மாங்குளத்தில் ஒன்றிணைந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தை வந்தடைந்து.

கடந்த 2006 ஆம் ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை வந்து பேரணி நிறைவடைந்திருந்தது.

இவ்வாறு நிறைவடைந்த குறித்த நடைபவனி ஆனது இன்று புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பயணமாகியுள்ளனர்.

இந்த பேரணியானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் வரை சென்று அங்கு இடம் பெறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )