2024 மார்ச்சில் ஜனாதிபதித் தேர்தல்; ரணில் திட்டம் என்கிறார் விமல்

2024 மார்ச்சில் ஜனாதிபதித் தேர்தல்; ரணில் திட்டம் என்கிறார் விமல்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 2024 மார்ச் மாதமளவில் தேர்தல் நடத்தப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹங்வெல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே வீரவங்ச இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ரணில் விக்கிரமசிங்க இடைக்கிடையே சின்ன சின்ன நிவாரணங்களை வழங்கி வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது. மின்சார கட்டணத்தை 60 – 70 வீதத்தால் அதிகரித்து தற்போது 14 வீதத்தால் குறைப்பதற்கு தயாராகியுள்ளனர். அவ்வாறான நிவாரணங்களுக்கு எவரும் ஏமாந்து விடக்கூடாது.

எனக்குக் கிடைத்துள்ள தகவல்களுக்கமைய ரணில் விக்ரமசிங்க 2024 மார்ச் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு திட்டமிடுகிறார். அதுவரையில் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வெளிநாட்டு கடன் தவணைகளை செலுத்தப் போவதில்லை. இதனால் நாட்டில் கையிருப்பில் உள்ள டொலர்களை பயன்படுத்தலாம்.

இவ்வாறான தந்திரங்களை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் வரையில் பின்பற்றுவதால் நாங்கள் புதிதாக எதனையும் எதிர்பார்க்க முடியாது. இந்த குழியில் இருந்து நாங்கள் மேலே வர வேண்டும். எவரும் ரணிலின் மாயாஜாலங்களுக்கு ஏமாந்து விடக்கூடாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )