அமைச்சுப் பதவிகளை கேட்கும் மஹிந்த

அமைச்சுப் பதவிகளை கேட்கும் மஹிந்த

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டுமென அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியிருக்கிறார்.

அமைச்சுப் பதவிகள் இல்லை என்பதால், பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையில் இருக்கிறார்கள். இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் மஹிந்தவிடம் கேட்டிருக்கிறார்.

இதற்கு, பொதுஜன பெரமுன எம்.பிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டால் நல்லது என பதிலளித்திருக்கிறார்.

பொதுஜன பெரமுனவின் அரசாங்கமே இலங்கையில் ஆட்சி செய்கிறது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவை அக்கட்சியினரே ஜனாதிபதியாக்கியிருக்கிறார்கள்.

அமைச்சரவையில் ஜனாதிபதிய தவிர்த்து இப்போது 21 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 18 அமைச்சர்கள் பொதுஜன பெரமுனவின் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்தவர்களே.

அதுபோல இராஜாங்க அமைச்சர்களாக 38 பேர் இருக்கிறார்கள். அதில் 35 இராஜாங்க அமைச்சர்கள் பொதுஜன பெரமுனவின் ஊடாகப் பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் தான்.

அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சர்களாகவும் மொட்டுக் கட்சியினரே இருக்கிறார்கள்.

அவ்வாறிருக்க இன்னும் யாருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென மஹிந்த கூறுகிறார் என்பது புரியவில்லை.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )