
ரணிலால் ஆசியாவுக்கு பெரிய பாதுகாப்பு…
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆசியாவிற்கு விசேட பாதுகாப்பு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசியாவில் பிரிவினைக்கு இடமளிக்கப்பட மாட்டாது என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவிக்க ரணில் விக்கிரமசிங்க உழைத்ததாகவும் அவர் கூறினார்.
ஜப்பானில் நடைபெற்ற மாநாட்டில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை கடுமையாகத் தெரிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி தெளிவான வெளிவிவகாரக் கொள்கையைக் கொண்டிருப்பதையே இது காட்டுவதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
CATEGORIES செய்திகள்

