பொது நினைவு தூபி; இனப்பிரச்சினைகளை மூடி மறைப்பதாகவே அமையும்..!

பொது நினைவு தூபி; இனப்பிரச்சினைகளை மூடி மறைப்பதாகவே அமையும்..!

பொது நினைவு தூபி என்பது மேலும் முரண்பாடுகளை வலுப்படுத்தும் எனவும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த மாட்டாது எனவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ் மக்களிற்கு பொது நினைவு தூபி அமைத்தல் தொடர்பாக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து யாது? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

அவர் பதிலளிக்கையில்,

பொது நினைவு தூபி என்பது மாறுபட்ட பிரச்சினைகளை உடையவர்களிற்கு தீர்வாக செய்வது.

மேலும் முரண்பாடுகளை வலுப்படுத்துமே தவிர அது நிச்சயமாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கோ அல்லது வேறு ஒரு விடயத்திற்கோ உதவமாட்டாது.

மேலும், நினைவு தூபியில் பெரும்பாலான சிங்களவர்களும் , படை வீரர்களுமே அஞ்சலி செலுத்த முடியும்.

மாறாக போரிலே பாதிக்கப்பட்ட எமது மக்களிற்காக அஞ்சலி செலுத்த முற்படின் முள்ளிவாய்க்கால் விடயங்களையே நினைவுபடுத்தும்.

இவ்வாறாக பொது நினைவு தூபி என்பது இன பிரச்சினையை மூடி மறைப்பதற்காக அமைக்கப்படும் ஒன்றாகவே இதனைபார்க்க முடியும்.

மாறாக தமிழ் மக்கள் வேறு எந்த வழியிலும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )