முடிந்தால் ‘அரகலய’வினர் மீது இன்னொரு முறை கை வைத்துப் பாருங்கள்; பகிரங்க மாக கடுமையாக எச்சரிக்கும் செயற்பாட்டாளர்கள்

முடிந்தால் ‘அரகலய’வினர் மீது இன்னொரு முறை கை வைத்துப் பாருங்கள்; பகிரங்க மாக கடுமையாக எச்சரிக்கும் செயற்பாட்டாளர்கள்

நாங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் வன்முறையில் ஈடுபட்டதில்லை ஆனால் ராஜபக்சவின் ஓடும் நாய்கள் இன்னொரு ‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது விரல் வைத்தால், நாங்கள் என்ன செய்வோம் என்பதை அவர்களுக்கு காட்டுவோம் என்று, அண்மையில் அரசியல் குண்டர்களால் ‘அரகலய’ செயற்பாட்டாளர் பியத் நிகேஷாலா மீதான தாக்குதலுக்கு எதிராக பேசிய அரகலய ஆர்வலர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரகலய செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பேசுகையில்,

மே 9 ஆம் திகதி(2022) இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தமது எஜமானர்களுடன் பொது வெளியில் தலை காட்டாமல் இருந்த அரசியல் அடியாட்கள் தற்போது மீண்டும் தலையெடுத்து மக்களை துன்புறுத்துவது போல் தென்படுகிறது.

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடல் அரகலய ஆரம்பிக்கப்பட்ட போது பொலிசார் முதலில் அரகலய செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவை துன்புறுத்தியதாக சமூக ஊடக ஆர்வலர் ஷஷிக திஸாநாயக்க தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, விசாரணை என்ற போர்வையில் துன்புறுத்தப்பட்டார்.

“பின்னர் சில ஆயுதமேந்திய குண்டர்கள் யூடியூபர் டிலான் சேனாநாயக்கவின் ஸ்ரூடியோவிற்குள் நுழைந்து அவரை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் சரியாக நடத்தப்படவில்லை.

மூன்றாவது சம்பவம் கடுவெல முன்னாள் பிரதி மேயர் மற்றும் அவரது குண்டர்களால் பியத் நிகேஷலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கடுவெல முன்னாள் மேயர் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்றார்.

இங்கு, அரகலய செயற்பாட்டாளர் மனோஜ் முதலிகே கூறுகையில், நாங்கள் இதற்கு முன் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடவில்லை, காலி முகத்திடலில் மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினோம். அதன்பின்னரும் அவ்வாறே நடந்து கொள்கிறோம்.

“நாங்களும் நாட்டுப்புற உணவால் ஊட்டப்பட்ட கிராமத்து இளைஞர்கள். இனி ஒரு ‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது விரல் விரலை வைத்துப் பாருங்கள், நாங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டோம் என்று தெரியவரும். முழு நாட்டையும் வீதிக்கு கொண்டு வருவோம் ” என முதலிகே எச்சரித்தார்.

‘அரகலய’ செயற்பாட்டாளர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு அரகலய செயற்பாட்டாளர் மொஹமட் ருஷ்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் சிறிது நேரத்தில் பறந்து சென்று ஒரு அரசியல்வாதியை பொதுவெளியில் பிரசன்ன ரணதுங்க கட்டித் தழுவியிருந்தார், பின்னர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரது மாளிகையில் சோதனை நடத்தியபோது, அவரைக் கைது செய்ய வழிவகுத்தது” என்றும் ருஷ்டி கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )