
தேசிய அரசாங்கம் தொடர்பாக?; ரணில்- மகிந்த முக்கிய சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இவர்கள் இருவர் மாத்திரமே கலந்துக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் சில தீர்மானகரமான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சில முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக பேசப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மீண்டும் சந்தித்து விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் இணக்கப்பாட்டுடன் கலந்துரையாடல் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் முன்வைத்த விசேட கோரிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி, இதன் போது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

