அடுத்த வருடம் 4 தேர்தல்கள்

அடுத்த வருடம் 4 தேர்தல்கள்

2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நான்கு தேர்தல்கள் நடத்தப்படும் என அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என்பன நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அதன் பின்னரே ஏனைய தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல பிரதான கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )