சிறிய குற்றமென்றால் இனி வீட்டுக்காவல்

சிறிய குற்றமென்றால் இனி வீட்டுக்காவல்

சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கு ஏற்ற வகையிலான சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் ,அரசியலமையப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பு மகசின், கொழும்பு விளக்கமறியல் , கொழும்பு வெலிக்கடை. வட்டரக்க மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்ற போது இதில் கலந்துகொண்டபோதே இவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

யாரேனும் நபர் ஒருவர் சிறைப்படுத்தப்படுவதற்கு குற்றம் என்னவாக இருந்தாலும் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை கவனித்து பாதுகாப்பது அரசின் பொறுப்பு . அரசினால் வழங்கப்படுகின்ற வசதிகளுக்கு மேலதிகமாக கைதிகளுக்கு தேவையான நலனோம்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு சிறைச்சாலை கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுக்கவேண்டும்.நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் தற்போது சுமார் 26,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் குற்றவாளியாக்கப்பட்ட 800பேர் வரை இருக்கின்றனர்.

1934ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்தடவையாக மனிதாபிமான அடிப்படையில் இந்த நாட்டு சிறைச்சாலை ஒழுங்கு விதிகளில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருப்பவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக சிறைச்சாலைக்குள்ளேயே 6 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களை வீட்டுக்காவலில் வைக்க முடியுமா என ஆராய்ந்து சட்டமொன்றை உருவாக்க தற்போது குழுவொன்று அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )