சிங்களத்துக்கு மாற்றிய ஆளுநர் அதனை தமிழாக்கிய அமைச்சர்; மீண்டும் பழைய பெயருக்கு மாறிய ”புன்னக்குடா வீதி” – அமைச்சர் அதிரடி

சிங்களத்துக்கு மாற்றிய ஆளுநர் அதனை தமிழாக்கிய அமைச்சர்; மீண்டும் பழைய பெயருக்கு மாறிய ”புன்னக்குடா வீதி” – அமைச்சர் அதிரடி

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில் “எல்மிஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட புன்னக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை அதே “புன்னக்குடா வீதி” என்ற பழைய பெயரோடு அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது.

இந்நிகழ்வு கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர புன்னக்குடா வீதி சந்தியில் நேற்று திங்கள்கிழமை இடம்பெற்றது.நிகழ்வில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் சமூக நல விரும்பிகளும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்து இனமுரண்பாடுகளை உருவாக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

ஏறாவூர் நகர பிரதேசம் நூறு சத வீதம் முஸ்லிம் சமூகத்தைக் கொண்டமைந்திருந்தபோதும் கூட அந்த வீதிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரினதும் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென தென்பகுதி காலிப் பிரதேச சிங்கள சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதி அதில் ஏறாவூர் புன்னக்குடா வீதிக்கு “எல்மிஸ் வல்கம” என பெயரை மாற்றுமாறு கோரியிருந்தனர்.

அந்த வேண்டுகோளை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் ஆளுநர் அதரிகாரிகளுக்கு பெயரை மாற்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

ஆளுநர் ஏற்கெனவே ஏறாவூர் பொதுச் சந்தையை “ஏறாவூர் சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு ஏறாவூர் நகர சபைக்கு கடிதம் அனுப்பியிருந்ததும் அது ஆளுநரது உத்தியோக பூர்வ வலைத் தளத்தில் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியவுடன் ஆளுநர் அந்த வார்த்தைப் பிரயோகத்தை மாற்றிக் கொண்டதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )